About KP Astrology in Tamil:
அடியேன் KP Astrology முறையை பின்பற்றுவதால், KP ஜோதிடம் என்றால் என்ன? என்பதை பற்றி விளக்க இங்கே கடமைப்பட்டுள்ளேன்.
ஜோதிடத்தில், ஒருவரின் விதி அமைப்பை பற்றி தெளிவாக அறிய.. அவரின் ஜாதக கணிதம் என்பது மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும்!
பாரம்பரிய ஜோதிட முறையில் (In Vedic Astrology) ஜாதகம் என்றால் அது ராசி கட்டமும், நவாம்ச கட்டமும் தான். இந்த ராசி மற்றும் நவாம்ச கட்டங்களில் உள்ள கிரக நிலைகளில் ஒரு சிறு மாற்றத்தை காண வேண்டும் என்றால் கூட.. நாம் குறைந்தது சுமார் 13 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
அதாவது உதாரணமாக,
ஒரு குறிப்பிட்ட இடத்தில்..
ஒரு குறிப்பிட்ட தேதியில்,
காலை 10:00 மணியளவில் ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த குழந்தைக்கான ஜாதகத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தின் நிலைகள் என்ன வருகிறதோ, அதே தான் அப்படியே காலை சுமார் 10:12 மணி வரை இருக்கும். காலை 10:13 மணிக்கு பிறகே நவாம்ச கட்டத்தின் லக்ன நிலையில் ஒரு சிறு மாற்றம் இருக்கும்.
அதாவது பிறந்த தேதி, பிறந்த இடத்தில் மாற்றம் இல்லாத போது..
பிறந்த நேரம் 12 நிமிடங்கள் மாறினாலும் கூட, பாரம்பரிய முறைப்படி கணிக்கும் ஜாதகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதே அடியேன் இங்கே கூற வருவது ஆகும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், பாரம்பரிய ஜோதிட முறைப்படி ஜாதகங்கள் கணித்தால்.. சுமார் 13 நிமிட இடைவெளியில் பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் (ஒரே ராசிக் கட்டம் & நவாம்ச கட்டம்) தான் வரும்.
ஆனால் இரட்டைக் குழந்தைகள் பொதுவாக 3 அல்லது 4 நிமிட இடைவெளியில் பிறந்து விடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆக அவர்கள் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி கணித்தால் ஒரே ஜாதகம் (ஒரே ராசி மற்றும் நவாம்ச கட்டம்) தானே வரும். இப்படி ஒரே ஜாதகம் தான் என்பதற்காக இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்து விடுமா என்ன??
நிச்சயமாக இல்லை..
சரி, இரட்டை குழந்தைகள் பிறப்பது கூட கொஞ்சம் அரிதான விஷயம் என்று எடுத்துக் கொண்டாலும், பிறப்பு விகிதம் என்பது படிப்படியாக அதிகரித்து கொண்டே வருவதால், 13 நிமிட இடைவெளிக்குள் ஒரே ஊரில் வெவ்வேறு தாய்மார்களுக்கு பல குழந்தைகள் பிறக்கின்றதே!!
ஆக, இந்த ஜாதகம் கணிதம் செய்யும் முறையை சற்று மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஜோதிட துறைக்கு ஏற்பட்டது.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற..
"ஜோதிட மாமேதை"
"ஜோதிட மார்த்தாண்ட்"
பெருமதிப்பிற்குரிய K. S. Krishnamurthy ஐயா அவர்கள்..
முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 பிரிவுகளாக (4 பாதங்களாக) பிரித்ததை, நம் முன்னோர்கள் சொன்ன சில அடிப்படை விதிகளை அடிப்படை ஆதாரமாக வைத்தே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 9 பிரிவுகளாக பிரித்து.. பின்னர் பல ஆராய்ச்சிகளின் பலனாக உபநட்சத்திரம் எனும் புதிய கோட்பாட்டை ஜோதிடத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த உபநட்சத்திர கோட்பாட்டின் (Sublord theory) மூலமாக ஜாதக கணிதத்தை மிகவும் துல்லியப்படுத்தி.. ஜோதிட உலகில் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்றால் அது மிகையாகாது.
அதாவது,
ஜோதிட மாமேதை K. S. Krishnamurthy ஐயா அவர்கள் கூறிய.. உபநட்சத்திர கோட்பாட்டின்படி ஜாதகம் கணிதம் செய்யப்படும் பொழுது.. பிறந்த நேரத்தில் வெறும் 30 வினாடி மாற்றம் செய்தாலே ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுவதை நாம் தெளிவாக உணரலாம்.
பிறந்த நேரத்தில் வெறும் 30 வினாடி மாற்றம் செய்தாலே ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுகிறது எனில், இந்த KP ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் எந்த அளவிற்கு துல்லியமானது என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
ஜோதிட மாமேதை K. S. Krishnamurthy ஐயா அவர்கள் வழங்கிய உபநட்சத்திர கோட்பாட்டை பின்பற்றும் ஜோதிட முறைக்கு Krishnamurthy Paththathi என பெயரிடப்பட்டது. இதை தான் நாம் சுருக்கமாக KP Astrology என அழைக்கிறோம். (KP means Krishnamurthy Paththathi. பத்ததி என்பதற்கு வழி அல்லது ஜோதிட முறை என்பது பொருள் ஆகும்).
To learn more about KP Astrology in Tamil with detailed examples please visit articles page.
About KP Astrologer Arun Subramanian:
KP Astrologer Arun Subramanian அவர்கள் திருச்சி மாவட்டம், இலால்குடியில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். ஜோதிடத்தின் மேல் இருந்த அதீத ஈர்ப்பின் காரணமாக தனது இளம் வயதிலேயே ஜோதிடத் துறையில் கால் பதித்தவர்.
முதலில் தனது உறவினர் ஒருவரின் வழிகாட்டுதலில் ஜோதிடத்தில் சில அடிப்படை விஷயங்களை கற்று வந்த இவர், பின்னர் AARA பயிற்சி மையத்தில் சேர்ந்து பாரம்பரிய ஜோதிடத்தை முறையாக கற்று அதில் தேர்ச்சி பெற்றதன் மூலமாக "ஜோதிஷ கலாநிதி" என்கிற பட்டத்தை பெற்றார்.
அடுத்து, ஜோதிடத் துறையில் சுமார் 4 வருடங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்னர், சென்னை பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையத்தில் சேர்ந்து..
"சார ஜோதிட சக்கரவர்த்தி"
குருஜி A. தேவராஜ் ஐயாவிடம் KP ஜோதிட முறையையும் கற்று "ஜோதிஷ ஆதித்யா" என்கிற பட்டம் பெற்று அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்.
வாடிக்கையாளர்களுக்கு..
Online Horoscope Predictions வழங்குவதோடு இல்லாமல், "யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக" என்கிற நோக்கில்.. ஜோதிடம் கற்க விரும்பும் ஜோதிட ஆர்வலர்கள் பலருக்கு இந்த KP Astrology முறையை கற்றுக் கொடுத்தும் வருகிறார்.
இதுவரை உலகம் முழுவதிலும் இருந்து, சுமார் 470-க்கும் மேற்பட்ட அன்பர்கள் இவரிடம் நேரடி வகுப்பின் மூலமாகவும், Online Astrology Classes வாயிலாகவும் KP Astrology பயின்று உள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜோதிடத் துறையில் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இவர், அவ்வப்போது பல அரிய விஷயங்களை கட்டுரைகளாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து.. ஜோதிட ஆர்வலர்கள் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல்,
Astro Whiz என்கிற தனது YouTube சேனல் வாயிலாக.. ஜோதிடத்தில் புரிந்து கொள்ள சற்று கடினமான விஷயங்களையும் காணொளிகளின் வாயிலாக மிக எளிய முறையில் விளக்கம் அளித்து வருகிறார். YouTube-ல் சுமார் 9600 ஜோதிட ஆர்வலர்கள் / ஜோதிடர்கள் இவரை பின் தொடர்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத் துறையில் திரு. அருண் சுப்ரமணியன் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் கடந்த 2018 வருடாந்திர மாநாட்டின் போது, இவருக்கு "ஜோதிஷ மகா ஆச்சார்யா" என்கிற சிறப்பு பட்டமும், "சிறந்த ஜோதிட ஆசான்" என்கிற விருதினையும் வழங்கி கௌரவித்தது..
தற்போது திரு. அருண் சுப்ரமணியன் அவர்கள் அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார்.
RELATED TAGS:
Astro Arun | Tamil Astrology Online
KP Astrology Online | KP Astrology in Tamil
Learn Astrology Online
|