உயர்க்கல்வியில் மருத்துவம் என்பது மிகப்பெரிய துறையாகவும், முன்னணி துறைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்த மருத்துவ துறையில் குறிப்பாக Under Graduate MBBS-க்கு பின்னர் Post Graduate ஆன MD & MS-ல் நிறைய பாடப் பிரிவுகள் உள்ளன.
அந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில் எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை பற்றி தான் மிக விரிவாக இப்போது பார்க்க இருக்கிறோம்.
அதாவது ஒருவர் MBBS முடித்து பின்னர் PG-ல் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நிபுணராக எந்த கிரகம் அவரின் ஜாதகத்தில் சாதகமாக இருக்க வேண்டும் என்பதை மிக விரிவாக பார்க்கலாம்.
மருத்துவ துறைக்கு சூரியன் தான் BASE PLANET ஆக விளங்குகிறார். காரணம் ஜோதிடத்தில் மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் சூரியனே காரகர்.
மருத்துவக் கல்வியில் ஜாதகர் எந்த பிரிவை பயில்வதாக இருந்தாலும் முதலில் சூரியன் வழிவிட வேண்டும். BASE PLANET-ஆன சூரியனின் தயவின்றி ஜாதகர் மருத்துவ துறையில் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது.
ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்து காணப்பட்டால்.. ஜாதகருக்கு மருத்துவம் பயில்வதற்கு SEAT கிடைப்பதே கஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆக அடியேன் இங்கே கூற வருவது,
மருத்துவத் துறையில் ஈடுபடும் அன்பர்களுக்கு சூரியன் வலுவாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை.. ஆனால் மோசமாக அமைந்து விடக் கூடாது. சூரியனின் தயவு ஜாதகருக்கு மிகச் சிறிய அளவிலாவது வேண்டும்!
மேலே கொடுக்கப்பட்டுள்ள Self-Explanatory Image-ல் Medical துறையில்
UG Courses (MBBS, BDS, B.V.Sc, BAMS.....)
PG Courses (Specializations in MD & MS) என almost அனைத்து Courses களையும் cover செய்துள்ளேன் என்று அடியேன் நம்புகிறேன்.
மருத்துவக் கல்வியில் உள்ள பாடப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மனித உடல் உறுப்புகளில் எந்த உறுப்பை பற்றின படிப்பு மற்றும் அவைகளின் நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நவகிரகங்களில் அவைகள் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்பதையே இங்கு Image-ல் mention செய்துள்ளேன்.
பொதுவாக, ஜோதிடத்தில் சந்திரனை ஒட்டுமொத்த உடலுக்கு காரகராக சொல்வோம். ஆனால் உடல் உறுப்புகள் யாவும் முழுக்க முழுக்க சந்திரனின் கட்டுப்பாட்டில் வராது.
ஒரு உறுப்பின் தன்மை மற்றும் அவற்றின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் மனித உடல் உறுப்புகளை நவகிரகங்களுக்கு தொகுத்து வைத்துள்ளார்கள். ஒரு கிரகம் குறிக்கும் உடல் உறுப்புகள் சப்பந்தமான படிப்புகளுக்கு அந்த கிரகமே காரகம் வகிக்கும்.
For an Example,
இங்கே ராகுவிற்கு Pulmonology என்று ஒரு மருத்துவப் பாடப்பிரிவை mention செய்துள்ளேன். Pulmonology என்பது Human Respiratory system பற்றின படிப்பு ஆகும். அதாவது சுவாச மண்டலம் பற்றிய படிப்பு ஆகும். ஆக இந்த Pulmonology Course என்பது உடல் உறுப்பில் நுரையீரல் பற்றி மிக விரிவாக படிப்பதாகும்.
ஆக மனித உடல் உறுப்பில் நுரையீரலுக்கு காரக கிரகமாக விளங்கும் ராகு பகவான் தான் மருத்துவக் கல்வியில் Pulmonology பிரிவிற்கு Authority.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் ராகு வலுவாக இருக்கும் போது ஜாதகர் Pulmonology discipline-ஐ தேர்வு செய்து படிக்கலாம். அதில் ஜாதகர் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று சிறந்த நிபுணராக திகழ முடியும்.
அடுத்து, மேலே குறிப்பிட்டுள்ள Medical courses யாவும் Engineering courses போல் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ள சொற்களாக அல்லாமல், சற்று புதிய சொற்களாக சில அன்பர்களுக்கு தென்படலாம். அதனால் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு துறையை பற்றியும் ஓரிரு வரிகளில் விளக்கம் அளிக்க அடியேன் விரும்புகிறேன்.
#சூரிய_பகவான்
1. Cardiology - இருதயத்தை பற்றின படிப்பு (Heart)
2. Ophthalmology - கண்களை பற்றின படிப்பு (Eye disorders)
3. Orthopaedics - எலும்புகள் பற்றின படிப்பு (Skeletal Deformities)
#சந்திர_பகவான்
1. Hematology - இரத்தத்தை பற்றின படிப்பு (Study of Human Blood)
2. Endocrinology - ஹார்மோன்கள் பற்றின படிப்பு (Hormones)
3. Psychiatry - மனோ நிலை சம்பந்தமான படிப்பு (study of Mental disorders)
4. Veterinary - கால்நடை மருத்துவம் பற்றின படிப்பு
#செவ்வாய்_பகவான்
1. BDS - பற்களை பற்றின படிப்பு (Dental)
2. Surgery - அறுவை சிகிச்சை சம்பந்தமான படிப்பு (Operation related)
#புதன்_பகவான்
1. Neurology - நரம்பு மண்டலம் சம்பந்தமான படிப்பு (Nervous system)
2. Otolaryngology - காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான படிப்பு (ENT)
#குரு_பகவான்
1. Paediatrics - குழந்தைகள் நல மருத்துவம் சம்பந்தமான படிப்பு (treatment to Infants & children)
2. Obstetrics - மகப்பேறு சம்பந்தமான படிப்பு (Pregnancy & Prenatal)
3. Hepatology - கல்லீரல் சம்பந்தமாக படிப்பது (Study of liver)
#சுக்கிர_பகவான்
1. Gynaecology - (Study about Female Reproductive system and Organ)
2. Cosmetology - Beauty Therapy
#சனி_பகவான்
1. Nephrology - சிறுநீரகம் சம்பந்தமாக படிப்பது (Study about Kidneys)
2. Dermatology - தோல், முடி சம்பந்தமான படிப்பு (Skin/hair care)
3. Podiatric - கணுக்கால், பாதம் சம்பந்தமான படிப்பு (study of Ankle, Foot and lower extremity)
4. Urology - Urinary system சம்பந்தமாக படிப்பது
#ராகு_பகவான்
1. Pulmonology - நுரையீரல் சம்பந்தமான படிப்பு (Study of Lungs)
2. Oncology - மனித உடல் உறுப்புகளில் ஆங்காங்கே ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றை குணப்படுத்தம் முறை சம்பந்தமான படிப்பு, மேலும் cancer சம்பந்தமான படிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். (Study about Tumours)
#கேது_பகவான்
1. Anaesthesiology - minimising body pain by keeping the patient in stable condition. Jus about SEDATION.
2. Nuclear Medicine - About Radiology, Radio graphy, Radio diagnosis....... Like X-ray
3. Forensic Medicine - தடயவியல் நிபுணத்துவம் (Study about post mortem)
4. Gastroenterology - குடல்பகுதி சம்பந்தமான படிப்பு (study of intestines).
|