அன்பர்கள், தங்களின் விருப்பமான நேரத்தில், தனக்கே உரிய வேகத்தில் எவ்வித இடையூறும் இன்றி தனி நபராக பயிற்சி பெற விரும்பினால் இந்த One-on-One Class-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.
மொழி:
பயிற்சி தமிழ் மொழியில் அளிக்கப்படும்.
பயிற்சிக்கான தகுதி:
ஜோதிடத்தில் கற்பதில் ஆர்வம் இருந்தால் போதுமானது.
ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் {{12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், காரகங்கள் மற்றும் தசாபுத்தி பற்றி}} தெரிந்து வைத்திருந்தால் சிறப்பு.
அடியேன் நேரடியாக KP ஜோதிட விதிகள் பற்றின பாடங்களுக்கு சென்று விடுவேன். இதனால் பயிற்சியின் கால அளவு சற்று குறையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் ஏதும் தெரியாத அன்பர்கள்.. அடிப்படையில் இருந்தே உயர்நிலை வரை கற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிக்கான கட்டணம்:
Rs. 1,100 per hour.
பயிற்சியின் காலம்:
Category - I (rite from basics)
அடிப்படையில் இருந்து கற்கும் நண்பர்களுக்கு - 41 hours (Total)
Category - II (without basics)
ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் தெரிந்த நண்பர்களுக்கு - 32 hours (Total)
பயிற்சி நடைபெறும் நேரம்:
Group Class-ல் அடியேன் குறித்த நேரம் மற்றும் வேகத்தில் பயிற்சி பெற வேண்டும்.
ஆனால், இந்த One-on-One Class-ல் அன்பர்கள் தங்களின் விருப்பமான நேரத்தில் பயிற்சி பெறலாம்.
அதாவது ஒவ்வொரு நாளும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான இரண்டு அல்லது மூன்று நேரங்களை (Two or three time slots) பரிந்துரைக்கலாம். அப்படி அன்பர்கள் பரிந்துரைத்த நேரங்கள் ஏதாவது ஒன்றில் அடியேன் பயிற்சி வழங்குவேன்.
அதே போல ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் (Session Time) பயிற்சி பெற விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம். அதையும் அடியேன் கருத்தில் எடுத்து கொள்வேன்.
{ஒரு குறிப்பிட்ட நாளில் குறைந்தது அரை மணி நேரமும், அதிகபட்சமாக 3 மணி நேரம் வரையிலும் பயிற்சி பெறலாம்}.
ஆனால் இதற்கான உத்தேச அட்டவணையை குறைந்தது ஒரு வாரத்திற்க்கு முன்னதாக அடியெனிடம் சமர்பிக்க வேண்டும். அப்போது தான் வகுப்பை சரியாக திட்டமிட முடியும்.
பயிற்சி நடைபெறும் முறை:
--->> Zoom Application-ல் Video Call மூலமாக வகுப்புகள் நடைபெறும்.
--->> அன்பர்கள் மிக எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாடத்திற்கும் IMAGE அல்லது PDF வடிவில் குறிப்புகள் வழங்கப்படும். அடியேன் இந்த பயிற்சியில் வழங்கும் Image-கள் யாவும் Self-explanatory images என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள Sample image-ஐ அன்பர்கள் சற்று பார்வையிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--->> மேலும், பயிற்சியின் போது முக்கியத் தலைப்புகளில் அன்பர்களுக்கு Exercise மாதிரியான சிறிய தேர்வுகள் நடத்தப்படும். இதில் பங்கேற்பதன் மூலமாக அன்பர்கள் விரைவாக மட்டுமல்லாமல் அதிக தன்னம்பிக்கையுடன் கற்றுக் கொள்ள முடியும்.
பாடத்திட்டம் மிக விரிவாக: {SYLLABUS}
இந்த பயிற்சி மொத்தம் ஒன்பது நிலைகளை (Nine Levels) கொண்டது ஆகும்.
அடிப்படையில் இருந்து கற்கும் நண்பர்களுக்கு:
- All 9 Levels
அடிப்படை தவிர்த்து கற்கும் நண்பர்களுக்கு:
- From Level 4 to Level 9
LEVEL - 1
ஜோதிடம் - அடிப்படை
1. ஜோதிடம் - ஓர் அறிமுகம்!
2. நவகிரகங்கள் எப்படி பூமியில் வாழும் மனிதர்களை ஆளுமை செய்கின்றன!!
3. "ஜோதிடம் பெயர்க்காரணம்"
4. விஞ்ஞானிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும்,
ஜோதிடத்தில் ரிஷிகள் குறிப்பிட்ட நவகிரகங்களுக்கும் வேறுபாடு ஏன்?? அதற்கான காரணம் என்ன!!
5. ஜோதிட வாய்ப்பாடு காலத்திற்கும், அளவுகளுக்கும்....
6. ராசி மண்டலத்தை பன்னிரு பிரிவுகளாக பிரித்ததற்கான காரணம் என்ன??
7. ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை 27-ஆக பிரித்ததற்கான காரணம் பற்றி..
8. ராசிகளின் தன்மைகள் பற்றி..
9. கிரகங்களுக்கு உரிய ராசிகளும் அதற்கான காரணமும்..
10. கிரகங்களுக்கு உரிய நட்சத்திரங்கள் பற்றி..
11. கிரகங்களின் வேகம் பற்றி..
LEVEL - 2
ஜோதிடம் - அடிப்படை
1. ஜோதிடத்தில்.. ராசி மற்றும் பாவம் என்றால் என்ன?? இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு!!
2. ராசிகளுக்கு உரிய மாதங்கள் பற்றி..
3. ஒரு ஜாதகத்தில் சூரியனின் இருப்பிடத்தை வைத்து மட்டும் ஜாதகர் பிறந்த தமிழ் மாதத்தினையும்,
தமிழ் தேதியையும் எப்படி கூறுவது..
4. லக்னம் என்றால் என்ன?? லக்னப்புள்ளி அறிவியல் பார்வையில்..
5. ஒரு ஜாதகத்தில் சூரியன் மற்றும் லக்னப்புள்ளியின் இருப்பிடத்தை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தை தோராயமாக எப்படி கண்டுபிடிப்பது??
6. நவாம்சம் என்றால் என்ன?? நவாம்ச கணிதம் பற்றி..
7. பாரம்பரிய ஜோதிட முறைக்கும் சார ஜோதிட முறைக்கும் என்ன வேறுபாடு??
8. ராசி மண்டலத்தில் கால புருஷத் தத்துவப்படி அமைந்த வீடுகளை பற்றி..
9. ராசி மண்டலத்தில் ஒருவரது ஜாதகப்படி அமையும் வீடுகளை பற்றி..
10. திரிகோண ராசிகளை பற்றி..
11. கேந்திர ராசிகளை பற்றி..
LEVEL - 3
ஜோதிடம் - அடிப்படை
1. ஜோதிடத்தில் பாவங்கள் என்றால் என்ன??
ஒவ்வொரு பாவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவினை எவ்வாறு கண்டறிவது??
2. காரகம் என்றால் என்ன??
3. கிரக காரகங்கள் விளக்கங்களோடு..
4. பாவ காரகங்கள் விளக்கங்களோடு..
5. பாவ காரக சூட்சுமங்கள் பற்றி..
6. தசாபுத்தி என்றால் என்ன?? தசாபுத்தி கணிதம் பற்றி.. தசாபுத்தி முக்கியத்துவம் என்ன..??
LEVEL - 4
KP ஜோதிடம் - அடிப்படை
1. KP ஜோதிடம் ஓர் அறிமுகம்!!
2. உபநட்சத்திரம் என்றால் என்ன??
3. உபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
4. உபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
5. உபஉபநட்சத்திரம் என்றால் என்ன??
6. உபஉபநட்சத்திர பிரிவுகளை பிரித்த விதம் பற்றி..
7. உபஉபநட்சத்திர பிரிவுகளின் அளவுகள் மற்றும் அமைப்பு!!
LEVEL - 5
KP ஜோதிடம் - ஜாதக கணிதம்
1. ஜோதிடத்தில் ராசிக்கும், பாவத்திற்கும் உள்ள வேறுபாடு பற்றி..
2. பாவ ஆரம்ப முனை பற்றி..
3. 12 பாவங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் அதிபதிகள் பற்றி..
4. பாவ அதிபதிகளின் பங்கு மற்றும் அவைகளின் தொகுப்பு
5. 9 கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் அதிபதிகள் பற்றி..
6. சார ஜோதிடத்தில் கிரகங்களின் அணுகுமுறை
7. பாவ சம்பந்தம் பற்றி மிக விரிவாக..
8. பாவ கூட்டணி பற்றி மிக விரிவாக..
9. அகம் சார்ந்த காரகங்கள் மற்றும் புறம் சார்ந்த காரகங்கள்
10. அகம் சார்ந்த பாவங்கள் மற்றும் புறம் சார்ந்த பாவங்கள்
LEVEL - 6
KP ஜோதிடம் - பலன் கூற விதிகள்
1. சார ஜோதிட பிரதான விதி விளக்கம்
2. சார ஜோதிடத்தில் கிரக இயக்கம் பற்றி..
3. சார ஜோதிடத்தில் கிரகம் குறிக்காட்டும் பாவங்கள்
4. சார ஜோதிடத்தில் பாவ தொடர்பு அமையும் விதம்
5 சார ஜோதிடத்தில் SELF PROMOTER பற்றி..
6. அகம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
7. புறம் சார்ந்த காரகங்களுக்கு பலன் நிர்ணயிக்கும் விதம்
8. பன்னிரு பாவங்களின் தன்மை பற்றி..
9. திரிகோணங்களின் தன்மை பற்றி..
10. பன்னிரு பாவங்களின் தரம்
11. சார ஜோதிடத்தில் பலன் கூறும் விதம் மிக விரிவாக..
LEVEL - 7
KP ஜோதிடம் - ஜாதக ஆய்வு செய்யும் முறை
1. கொடுப்பினையின் காரணிகள்
2. பாவ காரகத்தின் முக்கியத்துவம்
3. கிரக காரகத்தின் முக்கியத்துவம்
4. லக்ன பாவத்தின் முக்கியத்துவம்
5. ஒன்பதாம் பாவத்தின் முக்கியத்துவம்
6. ஜாதகத்தில் பாவ காரகத்தையும், கிரக காரகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் பற்றி..
7. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு.. ஜாதகத்தில் கொடுப்பினையின் பலத்தை அறிதல்..
8. ஒரு ஜாதகத்தின் காரணிகள் பற்றி..
9. ஒரு ஜாதகத்தில் கொடுப்பினையின் பங்கு
10. ஒரு ஜாதகத்தில் தசாபுத்தியின் பங்கு
11. ஒரு ஜாதகத்தில் கோச்சாரத்தின் பங்கு
12. ஒரு ஜாதகத்தில் நிலையான பாவங்கள் பற்றி..
13. ஒரு ஜாதகத்தில் நிலையற்ற பாவங்கள் பற்றி..
14. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் முறை.. ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வு செய்யும் பொழுது எதில் தொடங்கி எதில் முடிக்க வேண்டும் என்பதை பற்றிய விளக்கங்கள்..
LEVEL - 8
KP ஜோதிடம் - ஜாதக ஆய்வு Practicals
1. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உடல் ஆரோக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
2. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் கல்வியை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
3. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் திருமண வாழ்க்கையை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
4. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் குழந்தை பாக்கியத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
5. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் காதலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
6. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் உத்தியோகத்தை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
7. ஒரு ஜாதகத்தில் ஜாதகரின் தொழிலை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை
LEVEL - 9
KP ஜோதிடம் - உயர்நிலை பாடங்கள்
1. ஜாதகத்தில் ஒரு பாவத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
2. ஜாதகத்தில் ஒரு கிரகத்தை மிக விரிவாக ஆய்வு செய்யும் முறை..
3. KP ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை..
4. KP ஜோதிடத்தில் கோச்சார பலன் பார்க்கும் முறை..
5. KP ஜோதிடத்தில் சுப காரியங்களுக்கு முஹுர்த்தம் பார்க்கும் முறை..
6. KP ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை
|