Best KP Astrologer in Tamilnadu , Best KP Astrologer in Chennai
பிரசன்ன ஜோதிடம் | KP Astrology Horary Chart Technique

பிரசன்ன ஜாதகம் எப்படி கணக்கிடப்படுகிறது?

பிரசன்னம் என்றால் என்ன, ஏன் தேவை என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இந்த கட்டுரையில், உபநட்சத்திர கோட்பாடு மற்றும் 1 முதல் 249 வரையிலான எண் முறையை கொண்டு, KP ஜோதிடத்தில் பிரசன்ன ஜாதகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை விரிவாக காண்போம்.

உபநட்சத்திர கோட்பாடு (Sub Lord Theory)

ஒரு சில வினாடி இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை கூட உபநட்சத்திர கோட்பாட்டின் மூலம் மிக அழகாக வேறுபடுத்தி, தனித்தன்மையுடன் பலன் கூறுவதே உயர்கணித (KP) சார ஜோதிடத்தின் சிறப்பம்சம். பொதுவான ஜோதிடத்தில் ஒரு நட்சத்திரத்தை மட்டும் கணக்கில் கொண்டால், KP ஜோதிடத்தில் அந்த நட்சத்திரத்திற்குள் இருக்கும் உபநட்சத்திரம் வரை நுணுக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் மிகச் சரியான, தனித்துவமான பலன் கூற முடிகிறது.

இதே உபநட்சத்திர கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் பிரசன்ன ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

கேள்வி கேட்ட நேரத்தின் கிரக நிலைகள்

ஜோதிடரிடம் பிரசன்னம் பார்ப்பதற்காக வரும் வாடிக்கையாளர் மனதில் கேள்வி எப்போது உதயமாகிறதோ, அந்த குறிப்பிட்ட நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள கிரக நிலைகளே பிரசன்ன ஜாதகத்தில் இடம்பெறும். ஆனால் லக்னப்புள்ளியை பொருத்து வேறுபடும் பாவ நிலைகள் என்பது, கேள்வி உதயமான நேரத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் குறிப்பிடும் ஓர் எண்ணை பொருத்து கணிக்கப்படுகின்றது.

1 முதல் 249 எண் முறை

வான்மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக, மொத்தம் 249 உபநட்சத்திர உபபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆக 360 பாகையைக் கொண்ட முழு வான்மண்டலமும் 249 உபநட்சத்திரங்களை கொண்டது. இந்த 249 உபபிரிவுகளும் 1 முதல் 249 வரை உள்ள வரிசை எண்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஜோதிடர் வாடிக்கையாளரிடம் 1 முதல் 249 வரையிலான எண்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடச் சொல்வார்.

உதாரணம்

வாடிக்கையாளர் குறிப்பிடும் எண்ணுக்குரிய உபநட்சத்திரமே லக்ன பாவ உபநட்சத்திரமாக அமையும். அதாவது, அந்த எண்ணின் வரிசைக்குரிய உபநட்சத்திரத்தின் பாகையே லக்ன ஆரம்ப முனையின் பாகையாக நிர்ணயம் செய்யப்படும்.

பிளசிடஸ் முறையில் மற்ற பாவங்கள்

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட லக்ன புள்ளியை மையமாகக் கொண்டு, பிளசிடஸ் (Placidus) முறைப்படி மற்ற பதினொரு பாவங்களின் ஆரம்ப முனைகள் கணக்கிடப்பட்டு, பிரசன்ன ஜாதகம் முழுமையாக தயார் செய்யப்படுகிறது. இதன் பிறகு, ஒவ்வொரு பாவத்திலும் அமைந்துள்ள கிரகங்கள், அவற்றின் நட்சத்திராதிபதி, உபநட்சத்திராதிபதி ஆகியவற்றை கொண்டு பலன் கணிக்கப்படுகிறது.

எண் என்ன குறிக்கிறது?

ஜோதிடத்தில் லக்ன பாவம் என்பது ஜாதகர் ஒரு செயலில் ஈடுபடும் தன்மையையும், அவரது எண்ண ஓட்டத்தையும் (சிந்தனை) குறிக்கும். ஆக, வாடிக்கையாளர் தெரிவிக்கும் எண் அவர் நினைத்த அந்த செயலையே குறிக்கிறது. அந்த செயல் நிறைவேறுமா, நிறைவேறாதா, நிறைவேறும் எனில் எப்போது நிறைவேறும் என்பதை, அவர் கேள்வி கேட்ட அந்த நேரத்திற்குரிய கிரக நிலைகள் மூலம் ஜோதிடர் துல்லியமாக தெரிவிக்க முடியும்.

இதுவே KP ஜோதிடத்தில் பிரசன்ன ஜாதகம் கணிக்கப்படும் முழு முறை. இந்த நுணுக்கமான கணிப்பு முறையால் தான், பிரசன்னம் மூலம் மிகச் சரியான, குறிப்பிட்ட பதிலை பெற முடிகிறது.

உங்கள் கேள்விக்கு பிரசன்னம் மூலம் விடை பெற வேண்டுமா?

உங்கள் கேள்வியை அருண் சுப்ரமணியனிடம் நேரடியாக பகிர்ந்து, KP ஜோதிடத்தின் மூலம் துல்லியமான பதிலைப் பெறுங்கள்.

Book a Consultation WhatsApp