KP ஜோதிட முறையில் ஒரு ஜாதகர் "முக்கிய விஷயங்களில்" தன்னிச்சையாக முடிவு எடுப்பது சிறந்ததா!! (அல்ல)
மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது தான் சிறந்ததா!! என்பதை பற்றி பார்க்கலாம்..
நவகிரகங்களில், தன் மீது விழக்கூடிய ஒளியினை இரட்டிப்பாக பிரதிபலிக்கும் திறன் குரு பகவானிடம் மட்டுமே உள்ளது. அதாவது சூரியனிடமிருந்து பெறுகின்ற ஒளியினை இரு மடங்காக பூமிக்கு பிரதிபலிக்கும்/அனுப்பும் ஆற்றல் குரு பகவானிடம் மட்டுமே உள்ளது.
மேற்சொன்னபடி,
குரு பகவான் இரட்டிப்பாக ஒளியை பிரதிபலிப்பது போல.. ஆலோசகர்கள் யாவரும் பொதுவாக தான் கற்ற விஷயங்களோடு, தன் அனுபவத்தையும் ஆதாரமாக வைத்து பிறருக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆதலால் ஆலோசனை கூறும் ஆலோசகர்களை குரு பகவானே குறிக்கின்றார்.
ஆக ஆலோசனை மற்றும் ஆலோசகர்களை குறிப்பதால்.. KP ஜோதிடத்தில் சொல்புத்திக்கு குரு பகவானே Authority!!
அடுத்து,
புதன் பகவான் என்பவர் சூரிய குடும்பத்தில்.. சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்து கொண்டு மற்ற கிரகங்களை காட்டிலும் மிக அதிகளவிலான ஒளியினை பெறுவதாலும், துரிதமாக செயல்பட்டு சூரியனை அதிவிரைவில் சுற்றி வருவதாலும் சுயஅறிவு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றுக்கு காரகராக விளங்குகிறார். அதனால் KP ஜோதிடத்தில் சுயபுத்திக்கு புதன் பகவான் தான் Authority!!
ஒருவரின் Horoscope-ல் சுயபுத்தியை குறிக்கும் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அவர் பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் சுயமாக முடிவு எடுத்தல் என்பது ஆகாது. ஆக இந்த ஜாதகருக்கு சில முக்கிய விஷயங்களில் முடிவு எடுப்பதில் மற்றவர்களின் ஆலோசனைகள் என்பது அத்தியாவசியமாகிறது.
இதே Horoscope-ல் ஆலோசகர்களை குறிக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில்.. ஜாதகருக்கு மற்றவர்களிடம் இருந்து நல்ல முறையில் மேன்மையான ஆலோசனைகள் கிடைக்கும். இதனால் ஜாதகருக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் சிரமங்கள் ஏதும் இருக்காது.
To know about your Horoscope, Contact KP Astrologer Arun Subramanian and book an appointment for an Online Astrology Consultation!
உதாரணத்திற்கு,
ஒருவரின் Horoscope-ல் புதன் புற வாழ்க்கையை கெடுக்கும் 5, 9 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இது பொருளாதார விஷயங்களுக்கு மிகவும் மோசமான அமைப்பாகும். ஆக இந்த ஜாதகர் உத்தியோகம், தொழில் போன்ற விஷயங்களில் பொதுவாக சுயமாக முடிவு எடுப்பது என்பது சரி வராது. காரணம் இவருக்கு business tactics என்பது அவ்வளவாக இருக்காது.
இதே ஜாதகருக்கு குரு பகவான் புற வாழ்க்கைக்கு அதீத நன்மையை தரும் பாவங்களான 2, 4, 6, 10 ஆகிய பாவங்களில் ஏதாவது ஒரு பாவத்தையாவது தொடர்பு கொண்டிருந்தால்.. பொருளாதார விஷயங்களில் ஜாதகர் மற்றவர்களிடம் ஆலோசித்து எடுக்கும் முடிவினால் நல்ல பலனை பெறலாம்.
ஒரு விஷயத்தை அன்பர்கள் இங்கே நன்றாக கவனிக்க வேண்டுகிறேன். புதன் ---> 5, 9 பாவத் தொடர்பு என்றால் பொருளாதார விஷயங்களுக்கு மட்டுமே மோசம். அக வாழ்க்கை என்னும் Personal Life-க்கு அல்ல.
அதாவது,
புதன் ---> 5, 9 தொடர்பு என்றால் ஜாதகர் அக வாழ்க்கையில் திறம்பட செயல்படக் கூடியவர் ஆவார். ஆக இங்கே Personal life-ல் ஆலோசனைகளுக்கு தேவையே இருக்காது.
ஒருவேளை புதன் அகம் மற்றும் புற வாழ்க்கை இரண்டையுமே கெடுக்கும் 8, 12 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் அகம், புறம் என இரண்டிற்கும் மற்றவர்களின் ஆலோசனைகளையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஜாதகருக்கு ஏற்படும். ஆக இங்கே Horoscope ல் குரு பகவானின் நிலை என்பது மிகவும் வலுவாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இந்த பதிவின் மூலம் அடியேன் கூற வருவது..
Horoscope ல் புதன் கெட்டு, குரு நல்ல நிலையில் உள்ள ஜாதகர்கள் முக்கிய விஷயங்களில் தானாக எந்த முடிவும் எடுக்காமல், மற்றவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடப்பதே மேன்மையை தரும்.
அடுத்து..
ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்து, குரு வலுவிழந்து காணப்பட்டால், எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் குறுக்கிட்டாலும் கூட.. ஜாதகர் தான் எடுக்கும் முடிவில் திடமாக இருப்பதே சிறந்ததாகும்.
குரு கெட்டிருக்கும் ஜாதகர்களுக்கு ""நல்ல ஆலோசகர்கள் கிடைக்க மாட்டார்கள்"". அப்படியே கிடைத்தாலும் அவர்களின் வழிகாட்டுதல்கள் தோல்வியிலேயே முடியும் என்பது சற்று கசப்பான உண்மை ஆகும். ஆதலால் புதன் வலுவாக இருந்து குரு கெட்டிருக்கும் ஜாதகர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளுக்கு செவி கொடுக்கும் சூழல் ஏற்பட்டாலும் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதில் உறுதியோடு இருக்க வேண்டும்.