|
|
ஜாதகப்படி அதிர்ஷ்ட பெயர் வைப்பது எப்படி?
|
பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் வைக்க வேண்டும் என்கிற விஷயத்திற்காக வரும் வாடிக்கையாளர்களுக்காக அடியேன் இந்த கட்டுரையை பிரத்யேகமாக பதிவு செய்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனின் கட்டுப்பாட்டில் இயங்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய நவகிரகங்கள் தான் மனிதர்களாகிய நம்மை ஆளுமை செய்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே..
ஒரு மனிதரை ஒன்பது கிரகங்களும் ஆளுமை செய்தாலும், அவை அனைத்துமே அந்த ஜாதகருக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதில்லை. அதே போல, ஒரு ஜாதகருக்கு ஒன்பது கிரகங்களுமே தீமை செய்யும் அமைப்பிலும் இருப்பதில்லை.
அதாவது,
ஒருவர் பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்திற்கு ஏற்ப..
சில கிரகங்கள் அவருக்கு சாதகமாகவும் (நன்மை செய்யும் அமைப்பிலும்), சில கிரகங்கள் அவருக்கு பாதகமாகவும் (தீமை செய்யும் அமைப்பிலும்) அமைகின்றன.
ஒருவரின் ஜாதகப்படி,
நன்மை செய்யும் அமைப்பில் உள்ள கிரகத்தை.. நாம் Benefic Planet அல்லது Lucky Planet என்று அழைக்கலாம்.
ஒருவரின் ஜாதகத்தில்,
Lucky Planet ஆக திகழ்கின்ற கிரகம்.. அந்த ஜாதகருக்கு தெளிவான சிந்தனையை கொடுத்து வாழ்வில் உயர்த்துவது மட்டுமல்லாது அவருக்கு வரக்கூடிய இன்னல்களில் இருந்து காக்கவும் வல்லது..
ஆதலால்,
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது..
ஜாதகத்தில் Lucky Planet எதுவோ, அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைப்பது அந்த ஜாதகருக்கு ஒரு விதமான Positive Vibration-ஐ தரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
|
|
|
ஒரு பெயர் எந்த கிரகத்தினுடைய ஆதிக்கத்தில் வருகிறது என எப்படி கண்டுபிடிப்பது?
Numerology என்று எடுக்கும் பொழுது, 1 முதல் 9 வரை உள்ள ஒன்பது எண்களையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு எண்ணும் எந்த கிரகத்தினுடைய ஆதிக்கத்தில் வருகிறது என்பதை அடியேன் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.
இதன்படி,
"எண் 6" கூட்டுத்தொகையாக வரும் பெயர்கள் அனைத்தும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும்.
"எண் 3" கூட்டுத்தொகையாக வரும் பெயர்கள் அனைத்தும் குருவின் ஆதிக்கத்தில் வரும்.
உதாரணத்திற்கு,
ஒருவரின் ஜாதகத்தில், நவகிரகங்களில் புதன் பகவான் Lucky Planet ஆக உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஜாதகருக்கு புதன் பகவான் குறிப்பிடும் "எண் 5" கூட்டுத்தொகையாக வரும் பெயரை வைப்பது நன்மையை தரும்.
|
|
|
ஒரு பெயருக்கான கூட்டுத்தொகையை எப்படி கண்டுபிடிப்பது??
இதை பற்றி இப்போது உதாரணத்துடன் பார்க்கலாம்..
Numerology-ல் ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் குறிக்கும் எண்களை அடியேன் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.
ஒரு பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் குறிப்பிடும் எண்களை கூட்டி வரக்கூடிய விடை தான்.. அந்த பெயருக்கான கூட்டுத்தொகை ஆகும்.
இப்போது ARUN என்கிற பெயருக்கான கூட்டுத்தொகையை எப்படி கண்டறிவது என்பதை மிக விரிவாக பார்க்கலாம்.
|
|
|
ARUN என்கிற பெயருக்கான கூட்டுத்தொகை "5" ஆகும். எண் 5 என்பது நவகிரகங்களில் புதனுக்கு உரிய எண் ஆகும்.
ஆதலால் ARUN என்கிற பெயர் புதனின் ஆதிக்கத்தில் வருகிறது.
சிறப்பு குறிப்பு:
ஒவ்வொரு கிரகமும் பெற்ற காரகத்துவங்களை அடிப்படையாக கொண்டு, ரிஷிகள் நவகிரகங்களை இயற்கை சுப கிரகங்கள், இயற்கை பாவ கிரகங்கள் என இரு பிரிவாக பிரித்து வைத்துள்ளார்கள்.
இயற்கை சுபர்கள்:
குரு, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன்.
இயற்கை பாவர்கள்:
சனி, ராகு, கேது, செவ்வாய்.
ஒரு ஜாதகத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் Lucky Planet ஆக வரும் பொழுது அவற்றில் இயற்கை சுப கிரகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு..
ஒரு ஜாதகத்தில்,
சுக்கிரன், ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் அதிர்ஷ்ட கிரகங்கள் (Lucky Planet) என வைத்துக் கொள்ளுங்கள்.
ஆக, இந்த ஜாதகருக்கு..
சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைப்பதா? அல்ல
ராகுவின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைப்பதா?
எது சிறப்பு??
Simple!!
சுக்கிரன் - இயற்கை சுப கிரகம்
ராகு - இயற்கை பாவ கிரகம்
ஆதலால், சுக்கிரனின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைப்பது கூடுதல் சிறப்பு.
ஒரு வேளை, ஜாதகத்தில், இயற்கை சுப கிரகங்கள் எதுவும் வலுவாக இல்லாத பட்சத்தில், வலுவாக உள்ள இயற்கை பாவ கிரகத்தின் ஆதிக்கத்தில் வரும் பெயரை வைக்கலாம்.
|
|
|
|